Archive

Archive for May, 2018

ஓட்டப்பந்தயம்

May 12, 2018 Leave a comment

சில நேரம் ஈர்த்தும்

சில நேரம் எதிர்த்தும் வாழும்

மாறுபட்ட காந்த துண்டுகள் நாம்

துருவமின்றி பயணங்களுக்கு எந்த இலக்கு

என சிந்திக்கையில்

அர்த்தமின்றி புன்னகைத்து

என் எலக்ட்ரான்களுக்கு ஓட்டப்பந்தயம் வைக்கிறாய்

ஒரு வேளை தொடுஎல்லை நீ என்றால்

என் நியூட்ரான்கள் கூட ஓடும் தான்

 

 

Categories: Uncategorized

அவன் அவள் சுவர்

அவன்: சுவரின் இதயம்

அவள்: எது?

அவன்: துடிக்கும் கடிகாரம்

அவள்:  சுவரின் மதி?

அவன்: சுழலும் மின்விசிறி

அவள்: மதி சுழலும்மா?

அவன்: அதுவும் என்னை போல் உனக்காக சுழல்கிறது