அந்த நொடி
பத்திரமாய் ஒளித்துவைத்து இருந்த
உன்னைத் தேடி
மீட்டெடுத்து
என் முன் விட்ட
அந்த நொடி
உன் கால் அடி தடத்தில்
முளைத்த நிலாக்களை எடுத்து
மக்காத குப்பைத்தொட்டியில்
போட்டுவிட்டு
உன் பாதங்களை ரசித்த
அந்த நொடி
ஒரே சமயத்தில்
நினைவிலும்
கனவிலும்
வரப்பெற்ற வரம் கொண்ட
நொடிகளில் ஒன்று
அந்த நொடி
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback