பயணம்
சக பயணியின்
கவர்ந்த உரையாடல்கள் எல்லாம்
சேமிப்புக் கணக்கில்
வரவு வைக்கப்படும் நினைவுகள்தான்
கணக்கில் வராத
கனவுகளை
யாரும் பெரிதுபடுத்துவதில்லை
பயணப்படுத்தலின்
வேகம் கூடக் கூட
ஆரம்பப்புள்ளியின் அருகாமையை
உணரமுடியும் தானே
வழிகளில் மாறும் பயணங்களும்
பயணங்களில் மாறும் வலிகளும்
அசாதாரணமானவை
தனக்கான மரணங்களை
இரசிக்க முடியுமென்றால்
இந்த வாழ்தல் சற்று
ஆறுதல் தான்
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback