Archive

Archive for the ‘கற்பனை’ Category

இதழ் சேர்க்கை

September 17, 2017 Leave a comment

 

சேர்ந்து கொண்ட இதழ்களில் கேட்கும் சத்தம்

சொற்களை உண்டு சேறிக்கும் அடையாளம்

 

கருவறையின் வெம்மை உணர்ந்து வியற்கையில்

உள்ளம் மட்டும் குளிரும் விந்தை

 

விழிகள் சண்டையிட்டு மேலும் மேலும்

இணையும் இதழ்கள்

 

நரம்பில் பாய்ந்து செல்லும் இந்திர வில்லில்

வட தென் துருவங்களின் ஈர்ப்பு

 

நதியில் மூழ்க துடிக்கும் படகின் தவிப்பு – இதழ் சேர்க்கை

Advertisements

நீ எனக்கு

September 28, 2016 Leave a comment

வெட்கம்

 

உயரமாய்

வளர்ந்த

தொட்டால் சிணுங்கியடி

நீ

எனக்கு

என்னவள்

December 6, 2014 Leave a comment

அவளும் நானும் இரகசியமாய் இரசித்த பாடல் வரிகள் தனிமைக்கும் தெரிந்ததில்லை
யாரும் பார்க்காத அந்த ஒரு நொடியில் இயல்பாய்
அவள் இதழால் என் இதழ் தொட்டு இம்சிக்கிறாள்
எனக்கு முன் எழுந்து என் சூரியனை வரவேற்க்கிறாள்

அவள் உடல் வெண்மையில் என் சிந்தனைகள் தடுமாற – அவளோ
என் காதலெல்லாம் அவள் உடலில் மின்சாரமாய் பாய்வதாய் பிதற்றுகிறாள்
வார்த்தைகளும் நேரமும் தீர்ந்துபோன பின்பும் பேசிக்கொள்கிறோம்
என் தொடுதலின் அர்த்தம்புரிந்து வெட்கம்கொண்டு சிணுங்கிறாள்

~~~~~ என்னவள்: http://goo.gl/zrEuW2 ~~~~~

மீன் பூச்சி

November 16, 2014 Leave a comment

மீன்பூச்சி

 

 

மகள் : வண்ணத்துப்பூச்சிக்கு தண்ணியில நீந்த தெரியாதா ?
அப்பா : வண்ணத்துப்பூச்சி நல்லா நீந்தும். ஆனா அந்த வண்ணத்துப்பூச்சியை மீன்னு சொல்வாங்கம்மா.
மகள்: மீன்பூச்சி!!! மீன்பூச்சி!!!

~மகிழ்ச்சியில் நீந்தவும் தொடங்கினாள் என் வண்ணத்துப்பூச்சி~

தண்டனை

September 21, 2014 Leave a comment

பொய்யை அழகாய் சொல்லும் உண்மை உன் இதழ்கள்

அதன் மேல் தண்டனை கொடுக்க

இமைக்குள் மறைந்துகொள்ளும் காட்டிக் கொடுத்த உன் கண்கள்

அடையாளம்

August 2, 2014 Leave a comment

அடையாளம்

தன்னிச்சையாகவோ  பிறராலோ

அடையாளங்களை புசிக்கொண்டேன் சுயத்தில்

அடையாளம் கொண்டே அறியபடுவதாணேன்

அதையே சுயமென பிதற்றினேன்

அடையாளங்களை அடையாளம் கண்டு கலைந்திட

மீதமிருப்பதை சுயம் என்று அடையாளம் பூசாத

சுயமாகக் கொண்டேன் ….

மென்பொறியாளனின் காதல் ( பகுதி 2 : பவித்திரா )

April 10, 2014 Leave a comment
நிரம்பி வழியும் செயற்கை நீரூற்றும் காகித மலர்களும் வழக்கம்போல் இரசித்தேன் , என் கல்லூரி சாலையில் இருந்த நாகலிங்க மரம் ஒரு நொடி நினைவில் வந்துசென்றது. செக்யூரிட்டி “Sir ID Card Please” என்றான். வீட்டில் பத்திரமாய் இருக்கும் அடையாள அட்டையை என் சட்டை பாக்கெட்டில் தேடினால் எப்படி கிடைக்கும். ரகு சொல்லிவைத்தது போல் என்னை பாவமாய் பார்த்தான். தற்காலிக அடையாள அட்டையை வாங்கவேண்டும் இல்லையென்றால் அலுவலக கதவுகள் அலறி தொலையும் :(.

 

மாதிரி

நான் அங்கு இருந்த பதிவேட்டில் என் ‘Employee ID’யை எழுத தொடங்க , ‘…. to attend interview‘ என்ற பதற்றமான குரல் கேட்டு திரும்பினேன். ஒரு சாமுராயின் வாள்வீச்சை விட மிக நேர்த்தியாக என் இதயத்தை இரண்டாய் கிழித்திருந்தது அவள் பார்வை. வீட்டிலிருக்கும் அடையாள அட்டைக்கு நன்றிகள் சொன்னது மனசு. அவள் பதட்டத்துடன் என் அருகிலிருந்த பார்வையாளர் பதிவேடு எடுக்க காலமும் என் பார்வையும் உறைவதாய் உணர்ந்தேன்.
 
“Pen” என்று அவள் கேட்க என் கையில் இருந்த Reynolds பறந்துபோய் அவள் கையில் அமர்ந்தது. அவள் இதழில் அரும்பிய புன்னகை முதலுதவியை ஆரம்பித்து இருந்தது என் இதயதிருக்கு. வெளிர் நீல உடையில் எல்லா தேவதைகளை விடவும் அழகு அவள். வெள்ளைத்தாளில் ‘பவித்திரா’ என அவள் எழுத மனதுக்குள் கவிதைகளின் விதிவிலக்காய் எடுத்துக்கொண்டேன். அவள் விலகிசெல்ல விருப்பமின்றி விழித்துக்கொண்டேன். நல்லவேளை, ரகு அவன் பேசிக்கொண்டிருந்த அரசியலில் இருந்து நான் கட்சி மாறியதை கவனிக்கவில்லை.