Archive

Archive for the ‘கவிதை’ Category

அவள் பெயர் … முத்தம்… கவிதை… காதல்…

March 20, 2019 Leave a comment

கோடிட்ட இடத்தை நிரப்புக:

 

நாசி சுவாசிக்காமல்

செவிகள் நுகரும் ரகசியம் _________

 

செவிகள் கேளாமல்

இதழ்கள் சொல்லும் ரகசியம் _________

 

இதழ்கள் சுவைக்காமல்

கண்கள் ரசிக்கும் ரகசியம் _________

 

கண்கள் பார்க்காமல்

இதயங்கள் சிமிட்டும் ரகசியம் _________

 

(குறிப்பு : தலைப்பு)

 

 

அவள்… வினோ…

March 19, 2019 Leave a comment

அவள்: ஒரு கதை சொல் வினோ…

வினோ: நீ உறங்குவதற்கா இல்லை உன் உறக்கம் உறங்குவதற்கா?

அவள்: நான் உறக்கத்திலும் விழித்திருக்க

வினோ: விரியும் உன் கண்களை பார்த்தால் மறந்து போகிறேன் கதைகளை

அவள்: உன் கண்களை நான் மூடிகொள்கிறேன் நீ சொல்..

வினோ: உன் தொடுதலில் என் கதைகள் உருகிவிட்டன

அவள்: கதைகள் இல்லாமல் எப்படி உறங்குவது வினோ?

வினோ: வழக்கம்போல் என் உறக்கங்களை திருடிக்கொள்

அவள்: உனக்கு?

வினோ: உன்னைப்பற்றிய கனவுகள் போதும் எனக்கு

அவன் அவள் சுவர்

அவன்: சுவரின் இதயம்

அவள்: எது?

அவன்: துடிக்கும் கடிகாரம்

அவள்:  சுவரின் மதி?

அவன்: சுழலும் மின்விசிறி

அவள்: மதி சுழலும்மா?

அவன்: அதுவும் என்னை போல் உனக்காக சுழல்கிறது

காத்து இருப்பு

January 1, 2018 Leave a comment

உனக்கான காத்து இருப்புகள்

சற்று கனம் தான்

சொற்களுக்கு முன்

சிந்தி கடக்கும் ஒரு நொடி போல்

இயல்பாய் நெருடி

தேநீர் கோப்பையின் அந்த பக்கம்

நடக்கும் உரையாடல்கள் எதுவும்

அர்தமின்றி சிதறி கிடக்கிறது

இதழ் சேர்க்கை

September 17, 2017 Leave a comment

 

சேர்ந்து கொண்ட இதழ்களில் கேட்கும் சத்தம்

சொற்களை உண்டு சேறிக்கும் அடையாளம்

 

கருவறையின் வெம்மை உணர்ந்து வியற்கையில்

உள்ளம் மட்டும் குளிரும் விந்தை

 

விழிகள் சண்டையிட்டு மேலும் மேலும்

இணையும் இதழ்கள்

 

நரம்பில் பாய்ந்து செல்லும் இந்திர வில்லில்

வட தென் துருவங்களின் ஈர்ப்பு

 

நதியில் மூழ்க துடிக்கும் படகின் தவிப்பு – இதழ் சேர்க்கை

இது அது

June 16, 2017 Leave a comment

இது அதனுள் அதுவாகி  அதுகண்டு அதுவன்றி

அதுக்கொண்டு அதுவே ஆனது இது….

அது இதனுள் இதுவாகி இதுகண்டு இதுவன்றி

இதுக்கொண்டு  இதுவே ஆனது அது …

நீ எனக்கு

September 28, 2016 Leave a comment

வெட்கம்

 

உயரமாய்

வளர்ந்த

தொட்டால் சிணுங்கியடி

நீ

எனக்கு

அவள்

June 6, 2016 2 comments

மீட்சிக்கு அப்பாற்பட்டு இயல்பாய் மீட்டி செள்கிறாய் என்னை
உறங்கும் குழந்தையின் சிரிக்கும் கனவுகளில் வசித்து
மலர்கள் கண்டு விழிக்கும் சூரியன் என விழிகளில் பாடம் நடத்துகிறாய்
விரல்கோர்க்க நம்மை பின்தொடரும் பயணங்கள்

abstract-painting-2_00446254

செயலியில் உன்னை பார்த்து செயலற்று போகிறேன்
உன் தொடுதல் சொற்களின் புரிதல் குறைபாடு
மகிழம் பூ பெட்டகத்தில் பதப்படுத்துகிறேன் நினைவுகளை
என் உணர்வுகளுக்குள் ஊடுரூவிய கலப்படம் நீ
காலத்தை பகடிசெய்ய சின்னஞ்சிறு சண்டையிட்டு வாழலாம்
 

என்னவள்

December 6, 2014 Leave a comment

அவளும் நானும் இரகசியமாய் இரசித்த பாடல் வரிகள் தனிமைக்கும் தெரிந்ததில்லை
யாரும் பார்க்காத அந்த ஒரு நொடியில் இயல்பாய்
அவள் இதழால் என் இதழ் தொட்டு இம்சிக்கிறாள்
எனக்கு முன் எழுந்து என் சூரியனை வரவேற்க்கிறாள்

அவள் உடல் வெண்மையில் என் சிந்தனைகள் தடுமாற – அவளோ
என் காதலெல்லாம் அவள் உடலில் மின்சாரமாய் பாய்வதாய் பிதற்றுகிறாள்
வார்த்தைகளும் நேரமும் தீர்ந்துபோன பின்பும் பேசிக்கொள்கிறோம்
என் தொடுதலின் அர்த்தம்புரிந்து வெட்கம்கொண்டு சிணுங்கிறாள்

~~~~~ என்னவள்: http://goo.gl/zrEuW2 ~~~~~

மீன் பூச்சி

November 16, 2014 Leave a comment

மீன்பூச்சி

 

 

மகள் : வண்ணத்துப்பூச்சிக்கு தண்ணியில நீந்த தெரியாதா ?
அப்பா : வண்ணத்துப்பூச்சி நல்லா நீந்தும். ஆனா அந்த வண்ணத்துப்பூச்சியை மீன்னு சொல்வாங்கம்மா.
மகள்: மீன்பூச்சி!!! மீன்பூச்சி!!!

~மகிழ்ச்சியில் நீந்தவும் தொடங்கினாள் என் வண்ணத்துப்பூச்சி~