Archive

Posts Tagged ‘தமிழ்’

என்னவள்

December 6, 2014 Leave a comment

அவளும் நானும் இரகசியமாய் இரசித்த பாடல் வரிகள் தனிமைக்கும் தெரிந்ததில்லை
யாரும் பார்க்காத அந்த ஒரு நொடியில் இயல்பாய்
அவள் இதழால் என் இதழ் தொட்டு இம்சிக்கிறாள்
எனக்கு முன் எழுந்து என் சூரியனை வரவேற்க்கிறாள்

அவள் உடல் வெண்மையில் என் சிந்தனைகள் தடுமாற – அவளோ
என் காதலெல்லாம் அவள் உடலில் மின்சாரமாய் பாய்வதாய் பிதற்றுகிறாள்
வார்த்தைகளும் நேரமும் தீர்ந்துபோன பின்பும் பேசிக்கொள்கிறோம்
என் தொடுதலின் அர்த்தம்புரிந்து வெட்கம்கொண்டு சிணுங்கிறாள்

~~~~~ என்னவள்: http://goo.gl/zrEuW2 ~~~~~

மீன் பூச்சி

November 16, 2014 Leave a comment

மீன்பூச்சி

 

 

மகள் : வண்ணத்துப்பூச்சிக்கு தண்ணியில நீந்த தெரியாதா ?
அப்பா : வண்ணத்துப்பூச்சி நல்லா நீந்தும். ஆனா அந்த வண்ணத்துப்பூச்சியை மீன்னு சொல்வாங்கம்மா.
மகள்: மீன்பூச்சி!!! மீன்பூச்சி!!!

~மகிழ்ச்சியில் நீந்தவும் தொடங்கினாள் என் வண்ணத்துப்பூச்சி~

தண்டனை

September 21, 2014 Leave a comment

பொய்யை அழகாய் சொல்லும் உண்மை உன் இதழ்கள்

அதன் மேல் தண்டனை கொடுக்க இமைக்குள் மறைந்துகொள்ளும்

காட்டிக் கொடுத்த உன் கண்கள்

அடையாளம்

August 2, 2014 Leave a comment

அடையாளம்

தன்னிச்சையாகவோ  பிறராலோ

அடையாளங்களை புசிக்கொண்டேன் சுயத்தில்

அடையாளம் கொண்டே அறியபடுவதாணேன்

அதையே சுயமென பிதற்றினேன்

அடையாளங்களை அடையாளம் கண்டு கலைந்திட

மீதமிருப்பதை சுயம் என்று அடையாளம் பூசாத

சுயமாகக் கொண்டேன் ….

மென்பொறியாளனின் காதல் ( பகுதி 2 : பவித்திரா )

April 10, 2014 Leave a comment
நிரம்பி வழியும் செயற்கை நீரூற்றும் காகித மலர்களும் வழக்கம்போல் இரசித்தேன் , என் கல்லூரி சாலையில் இருந்த நாகலிங்க மரம் ஒரு நொடி நினைவில் வந்துசென்றது. செக்யூரிட்டி “Sir ID Card Please” என்றான். வீட்டில் பத்திரமாய் இருக்கும் அடையாள அட்டையை என் சட்டை பாக்கெட்டில் தேடினால் எப்படி கிடைக்கும். ரகு சொல்லிவைத்தது போல் என்னை பாவமாய் பார்த்தான். தற்காலிக அடையாள அட்டையை வாங்கவேண்டும் இல்லையென்றால் அலுவலக கதவுகள் அலறி தொலையும்😦.

 

மாதிரி

நான் அங்கு இருந்த பதிவேட்டில் என் ‘Employee ID’யை எழுத தொடங்க , ‘…. to attend interview‘ என்ற பதற்றமான குரல் கேட்டு திரும்பினேன். ஒரு சாமுராயின் வாள்வீச்சை விட மிக நேர்த்தியாக என் இதயத்தை இரண்டாய் கிழித்திருந்தது அவள் பார்வை. வீட்டிலிருக்கும் அடையாள அட்டைக்கு நன்றிகள் சொன்னது மனசு. அவள் பதட்டத்துடன் என் அருகிலிருந்த பார்வையாளர் பதிவேடு எடுக்க காலமும் என் பார்வையும் உறைவதாய் உணர்ந்தேன்.
 
“Pen” என்று அவள் கேட்க என் கையில் இருந்த Reynolds பறந்துபோய் அவள் கையில் அமர்ந்தது. அவள் இதழில் அரும்பிய புன்னகை முதலுதவியை ஆரம்பித்து இருந்தது என் இதயதிருக்கு. வெளிர் நீல உடையில் எல்லா தேவதைகளை விடவும் அழகு அவள். வெள்ளைத்தாளில் ‘பவித்திரா’ என அவள் எழுத மனதுக்குள் கவிதைகளின் விதிவிலக்காய் எடுத்துக்கொண்டேன். அவள் விலகிசெல்ல விருப்பமின்றி விழித்துக்கொண்டேன். நல்லவேளை, ரகு அவன் பேசிக்கொண்டிருந்த அரசியலில் இருந்து நான் கட்சி மாறியதை கவனிக்கவில்லை.

காலம்

February 25, 2014 Leave a comment

காலம்

இது இப்படியே இருந்துவிடலாம் என இதயம் விரும்ப
இது இப்படியே இருக்காது என வாதித்தது மூளை
இவை எதையும் கண்டுகொள்வதாய் இல்லை இதுவும் இப்படியும் ….

பவித்திரா – மென்பொருள் ( கற்பனைக் கதை ) பகுதி 1 : ஆரம்பம்

December 23, 2013 Leave a comment

கைப்பேசி 8:55 AM மணிக்கு என் தூக்கத்தை கலைத்து அலறியது, வெறுப்புடன்
அதை அணைத்துவிட்டு எழுந்தேன். இன்று திங்கட்கிழமை,
பள்ளிப்பருவத்திலிருந்து பிடிக்காத திங்கட்கிழமை மேலும் பிடிக்காமல்
போயிருந்தது வேலைக்கு செல்லத் தொடங்கியபின். அம்மாவின் தேநீர் தயாராய்
இருந்தது, அருந்திவிட்டு செய்தித்தாளை நோட்டமிட்டேன். வழக்கமான
சூடாக்கப்பட்ட செய்திகளுக்கு நடுவில் ‘வீண் செலவு’ என்ற என் தினப்பலனை
தேடிப் படித்துவிட்டு எழுந்தேன்.

குளித்துவிட்டு வந்து போது மணி 9:35 AM என்று காட்டியது. இன்றும் நேரமாகி விட்டது
வழக்கமாய் இறைவணக்கம் செய்யும் 5 நிமிடத்தை ஒன்றாய் குறைத்திருந்தேன்.
அதற்காக அம்மா துதி பாட அரம்பதிருந்தாள் உடனே விழியை இன்னுமிருக்கமாய்
மூடிக்கொண்டு இறைவனை வேண்டிக்கொண்டேன். இரண்டரை நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு
அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன் அலுவலகத்திற்கு. இன்னும் ரகுவை
(என்னோடு வேலை பார்ப்பவன்) கிளப்பிக்கொண்டு போகவேண்டும்.

5 என்று சொல்லி 20 நிமிடம் கழித்து ஒரு வழியாய் அவனும் கிளம்ப, இருவரும்
சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம். ரகு ஒரு ஊழலைப் பற்றி ஆரம்பித்தான், அது
கட்சி கொள்கை சமுதாயம் என்று சுற்றி இந்திய அரசியலில் பயணித்துக்கொண்டு
இருந்தது. காதில் ஹெட் போன் மாட்டிய சில இயந்திரங்களை பொருட்படுத்தாமல்
நடந்து பிரதான சாலையை வந்தடைந்தோம். பெங்களூர் நகரத்தில் சாலையை கடப்பது
சற்று கடினம், அதிலும் திங்கட்கிழமை காலை இன்னும் மோசம். ஆண்களும்
ஒருசில பெண்கள் மட்டுமல்ல வண்டிகளும் புகைபிடிக்கும் சாலை அது.
மூன்றாவதாய் வந்த பேருந்து தரையிலிருந்த மண்ணை வாரி எங்கள் மேல்
கொட்டிவிட்டு சென்றது . ஒரு வழியாய் சாலையை கடந்து அலுவலக நுழைவாயிலை
நெருங்கியதும் …. (தொடரும்)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 482 other followers